மது குடிக்கும் போட்டியில் வெற்றி பெற்று உயிரை விட்ட வாலிபர்

நாட்டில் எத்தனையோ போட்டிகள் நடந்து வரும் நிலையில் மது குடிக்கும் போட்டி ஒன்று டோமினிக் நாட்டில் நடந்தது. இந்த போட்டியில் ஒரே மூச்சில் ஒரு பாட்டில் மது குடித்து $520 பரிசு வென்ற நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்த 23 வயது கெல்வின் ரஃபெல் மெஜியா மது குடிப்பதில் எக்ஸ்பர்ட். தினமும் பல பாட்டில்கள் மது அருந்தும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வழக்கமாக மது அருந்தும் நைட் கிளப் கடைக்கு சென்றார். அங்கு மது குடிக்கும் போட்டி ஒன்று நடைபெற்றது. மதுப்பிரியரான இவர் அந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா? இந்த போட்டியில் கலந்துகொண்ட மெஜியா, மெக்சிகன் நாட்டு மது வகையான டக்கீலா என்ற மதுவை ஒரே மூச்சில் பாட்டில் முழுவதும் குடித்து பரிசுத் தொகையான 520 டாலரை வென்றார்

ஆனால் இவரது வெற்றி மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. சில நிமிடங்களில் திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் மெஜியா இறந்துவிட்டதாக கூறியதால் அந்த பகுதியே சோகமாகிவிட்டது. இறந்த மெஜியாவுக்கு இரண்டு வயது மகள் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.youtube.com/watch?v=d6Tl2dqHX4M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *