shadow

ஆண்களுக்கு இணையாக பெண்கள் சாதித்த முக்கிய சாதனை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

women-drinkஉலக அளவில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து சாதனைகளையும் புரிந்து வந்து கொண்டிருப்பதாக பெருமையாக கூறப்படும் நிலையில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துகின்றனர் என்று வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவால் சந்தோஷம் ஏற்படவில்லை.

கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆய்வு செய்ததில், ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது.

ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்தி வருவதாகவும், இதன் காரணமாக மது பாதிப்பினால் ஏற்படும் உடல்நலக்குறைவு பெண்களுக்கும் சரிசமமாக வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் மது குடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முடிவாக இந்த ஆய்வு பெண்கள் குறிப்பாக இளம்பெண்களின் போதைப் பழக்கத்தை குறைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகளின் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

Leave a Reply