shadow

836fce9f-1829-439f-9732-2eb4ff0c61f3_S_secvpf

கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒன்று தான். ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். அதாவது மூன்று பெரிய கேரட் ஆகும்.

ஒரே நேரத்தில் மூன்று பெரிய கேரட்டுகளை யாராலும் சாப்பிட முடியாது. ஆனால் ஒரு கப் கேரட் ஜூஸை ஒரே நேரத்தில் குடிக்க முடியும். இதனால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும். கேரட் சாப்பிடுவதற்கு பதிலாக, கேரட்டை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

* தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும்.

* கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.

* வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் சருமம் அதிகம் வறட்சியடைவதோடு, நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. கேரட்டில் இந்த வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம்.

* உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரட் ஜூஸ் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளதால், அதனை ஜூஸ் போட்டு தினமும் குடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, சிகரெட் பிடித்தோ அல்லது சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தோ நுரையீரலில் படிந்த நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

* தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

Leave a Reply