shadow

அப்துல்கலாம் மரணத்திற்கு டாக்டர்களின் அலட்சியம் காரணமா? உதவியாளர் வெளியிடும் திடுக்கிடும் தகவல்
abdul kalam
கடந்த, ஜூலை, 27ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மேகாலாயா மாநிலம், ஷில்லாங்கில், ஐ.ஐ.எம்., நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற போது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்கு டாக்டர்களின் அலட்சியமும், மரணத்திற்கு பின்னர் அப்துல்கலாம் முகம் கறுப்பாக மாறிப்போனதற்கு, டாக்டர்களின் தவறான சிகிச்சை முறையும் காரணம் என அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கூறியுள்ளார்.

அப்துல்கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மட்டுமின்றி அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் அவருடைய சிறப்பு ஆலோசகராகவும் இருந்து வந்த  பொன்ராஜ் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 1996ம் ஆண்டு முதல், அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றியும், அதன்பின், ஆலோசகராகவும் இருந்து வந்தேன். அவருடைய மரணம் எதிர்பார்க்காத ஒன்று. நான், அப்போது, மதுரை வந்து விட்டேன். நான் கேள்விப்பட்ட வரை, மேகாலயா சென்ற அவர், அம்மாநில ஆளுநர் சண்முகநாதனுடன் இணைந்து சாப்பிட்டு விட்டு, ஐ.ஐ.எம்., நிறுவனத்துக்கு சென்றார். அவருடன் எந்த மருத்துவக்குழுவும் செல்லவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அங்கு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அவர், திடீரென நெஞ்சில் கைவைத்தவாறு, வாயை திறந்தபடி கீழே விழுந்துள்ளார். அங்கு, யாராவது டாக்டர்கள் இருந்தால், காப்பாற்றியிருக்கலாம்.

அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு சென்றுள்ளனர். இந்தியாவில் மருத்துவத்தைப் பற்றி தெரியாத டாக்டர்கள் உள்ள மாநிலங்களில், மேகாலயாவும் ஒன்று. இதேபோல், பத்துக்கும் மேற்பட்ட மாநிலம் உள்ளது. டாக்டர்கள் ஏதேதோ சிகிச்சை அளிக்க, அதில் தான், அவருடைய முகம் கறுத்துப்போனது. டாக்டர்கள் அலட்சியமும், அவருடைய மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என கூறலாம். மற்றபடி, கலாம் மறைவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை’ என்று கூறினார்.

அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது அவருடைய உதவியாளரே குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply