shadow

sabarimala 1 மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கார்த்திகை 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதிலும் கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் மிக அதிகமாக குவிந்ததால் 6 மணி நேரம் வரை வரிசையில் நின்று காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கேரள மந்திரிகள் ரமேஷ் சென்னிதலா, சிவக்குமார் ஆகியோர் நேற்று சபரிமலைக்கு சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். பம்பை மற்றும் சன்னிதானம் பகுதிகளிலும் அவர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

sabarimala

சபரிமலையில் பக்தர்கள் செல்லும் காட்டு பாதையான எரிமேலி, அழுதா, காளகட்டி, கரிமலை போன்ற பகுதிகளில் புலிகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் சில பக்தர்களும் புலி நடமாட்டத்தை நேரில் பார்த்ததாக அமைச்சர்களிடம் புகார் கூறினர் எனவே இனிவரும் பக்தர்கள் காட்டு பாதை வழியாக பக்தர்கள் செல்வதை தவிர்க்கும்படி பக்தர்களுக்கு அமைச்சர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Leave a Reply