shadow

‘ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறுத்தாவிட்டால் இந்தியா தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா மிரட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஈரானுடன் இருந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, உலக அளவில் ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் நாட்டாமை போல் நடந்து வருகிறது. இந்தியா உள்பட ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்ற நிபந்தனையை அமெரிக்கா விதித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் ‘‘சீனா, இந்தியா உட்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

ஏன் என்ற கேள்வி கேட்காமல் அவர்கள் நிறுத்தி வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறியுள்ளோம். இருதரப்பு சந்திப்பின் போது இதை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். இனிமேல் நடைபெறவுள்ள இருதரப்பு சந்திப்பின் போதும், இதனை வலியுறுத்துவோம்.

பெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன. எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம். வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை’’ எனக் கூறினார்.

Leave a Reply