shadow

இலங்கையில் சர்வதேச விசாரணை தேவையில்லை. சுப்பிரமணியன் சுவாமி
subramanian-swamy-4
இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை என்றும் இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ் கட்சிகளே விரும்புவதாகவும்  பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால், வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட எவ்வித அதிகாரமும் இல்லை.

நான் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரம சிங்கேவை சந்தித்து பேசினேன். அப்போது, இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. மேலும் உள்நாட்டு விசாரணை குழுவில் வெளிநாட்டினர் இடம் பெறலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நண்பர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பின்தான் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும்”

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Leave a Reply