shadow

முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த பணிவான வேண்டுகோள்

திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று புதிய முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு ஒரு பணிவான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் வரும்போது தன்னை பார்த்து சிரிக்க வேண்டாம் என்றும், அது அவருக்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.,

ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் அடிக்கடி சிரித்ததாக சசிகலா குற்றஞ்சாட்டியதும், அதற்கு ஓபிஎஸ் சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு உணர்வு என்று பதிலடி கொடுத்ததும் தெரிந்ததே.

Leave a Reply