shadow

எங்கள் போராட்டத்தில் தலையிட வேண்டாம்’ நடிகர்களுக்கு இளைஞர்கள் எச்சரிக்கை

இளைஞர்களின் எழுச்சி காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் நடிகர்கள் நாளை மெளன அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தரப்பினர் கூறியபோது, எ’ங்கள் போராட்டத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள் தலையிட வேண்டாம். காவிரி பிரச்சனை உள்பட எந்த பிரச்சனையிலும் தலையிடாத நடிகர்கள், இந்த பிரச்சனையில் மட்டும் தலையிடுவது ஏன்?

கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத போதும், விவசாயிகள் கொத்து கொத்தாக மரணம் அடைந்த போதும் எங்கே போனார்கள் இந்த நடிகர்கள். தாங்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தில், ஏதாவது ஒரு சிறு தொகையை உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகையாக இதுவரை அளித்துள்ளார்களா? இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டம் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளதால், திரைத்துறையினரும் பெயரளவுக்கு உணர்வுகளைத் தெரிவிப்பதாக காலங்கடந்து அறிவித்துள்ளனர். இவர்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவையில்லை’ என்று கூறியுள்ளனர்.

தற்போது திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பது இளைஞர்கள் மட்டும் தான். பெண்கள், வயதானவர்கள் வீட்டிலேயே சிடி மூலம் படம் பார்த்துவிடுகின்றனர். எனவே இளைஞர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டால் தங்களால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை தாமதமாக புரிந்து கொண்ட நடிகர்கள் திடீரென இந்த மெளன அறப்போராட்டத்தை அறிவித்துள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply