shadow

அப்பா, அம்மா கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழாதீர்கள்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மூன்றாம் நாளாக மதுரை, நாமக்கல், விருதுநகர் மற்றும் சேலம் பகுதி ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். ரசிகர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொருவராக அவருடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். முன்னதாக மூன்றாம் நாளில் ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். இரவெல்லாம் தூங்காமல் பயணம் செய்து வந்தாலும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் இருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய உற்சாகம் மற்றும் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நானும் உங்களை போல ஒரு ரசிகனாக இருந்து வந்தவன் தான்

சிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகனாக இருந்தேன். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன். ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழக்கூடாது’


மதுரை என்றாலே வீரம் தான் ஞாபகம் வரும். 1976-ல் மதுரைக்கு நான் முதல் தடவை சென்றிருந்தபோது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்க்கு சென்றேன். அங்கே அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யுங்கள் என்று என்னுடன் வந்தவர் கூறினார். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான் என்று.

உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்

Leave a Reply