shadow

இனிமேல் நீ படம் இயக்கவேண்டாம். தனுஷூக்கு ரஜினி போட்ட உத்தரவு

தனுஷ் இயக்கிய முதல் படமான ‘பவர்பாண்டி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தை நேற்று பார்த்தார்

படத்தை பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆன ரஜினி, தனுஷை பாராட்டியதோடு, இந்த படத்துடன் டைரக்சனை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும், ‘இந்த ஒரு படம் உங்கள் பேரை இன்னும் பத்து வருடங்களுக்கு சொல்லும் என்றும் தனுஷ் ஒரு படம் இயக்கினாலும், அந்த படம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட படம் என்று நாளை வரலாறு சொல்லும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

ரஜினியின் பாராட்டை கேட்டு மெய்சிலிர்த்தாலும், அவர் கூறிய அறிவுரையால் மேற்கொண்டு படம் இயக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளாராம் தனுஷ்.

Leave a Reply