shadow

நாலுவரி வாட்ஸ்அப்பில் எழுதுவதில் அப்படி என்ன உங்களுக்கு மகிழ்ச்சி? விஜயபாஸ்கர் அதிருப்தி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும், உலகம் முழுவதும் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக மாஸ்க் மற்றும் சானிடைசர் தேவை அதிகரித்துள்ளது

தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் சானிடைசர் அனைத்தும் அரசிடம் கையிருப்பு உள்ளது

பொதுமக்களுக்கு தேவையான மாஸ்க், சானிடைசர் ஆகியவை மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு தவறு நடந்தால் அந்த தவறை பெரிதாக்கும் வகையில் நான்கு வரி வாட்ஸ் அப்பில் எழுதி வதந்திகளை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்பினால் உங்களுக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை

கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு அரசு தற்போது இயங்கி வருகிறது எனவே அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அனைவரும் பாசிட்டிவாக எண்ணம் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வேண்டுகோள் எடுத்துள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *