shadow

அமெரிக்க இந்தியர்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களை இழக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்.

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருட நவம்பரில் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றனர்.

ஜனநாயக கட்சியில் இருந்து அதிபர் வேட்பாளராக போட்டியிட ஹிலாரி கிளிண்டனுக்கும், பெர்னியே கான் டெர்ஸ் அவர்களுக்கும் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. இதுவரை 4 மாகாணாங்களில் நடந்த தேர்தலில் 3 மாகாணங்களில் ஹிலார் வெற்றி பெற்றுள்ளதால் ஜனநாயக கட்சியில் இருந்து அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் குடியரசு கட்சியில் இருந்து கிட்டத்தட்ட அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு பெற்றதாக கூறப்படுகிறது. எனவே வரும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் நேருக்கு நேர் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிலார் கிளிண்டன் இந்தியாவுடன் இணக்கமான உறவில் இருந்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்து கொண்டதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே கருத்தை மீண்டும் நேற்று தெரிவித்துள்ளார். நேற்று கொலம்பியா விமான நிலையத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும் போது ”இந்தியா நமது வேலைகளை எடுத்துக்கொள்கிறது. சீனாவும், ஜப்பானும் நமது வேலை வாய்ப்புகளை அபகரித்து விடுகின்றன.

ஆனால் இனி இது போல் நடக்காது. நண்பர்களே. இந்தியா, சீனா, மெக்ஸிகோ, ஜப்பான் மற்றும் வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை மீட்டுக்கொண்டு வருவேன். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவரை கட்டி சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியா குறித்து தொடர்ந்து டிரம்ப் விமர்சித்து வருவதால் அமெரிக்க இந்தியர்களின் ஓட்டுக்களை அவர் ஒட்டுமொத்தமாக இழந்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply