shadow

அமெரிக்கா: குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு 2 நகர மேயர்கள் தடை
donald
அமெரிக்காவில் வரும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் கொடுத்து கருத்து கூறிய குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து, ‘தாங்கள் இஸ்லாமியர்கள்’ என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த கருத்து இஸ்லாமியர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிருப்தி அடைய செய்துள்ளது. டொனால்டின் சர்ச்சைக் கருத்து குறித்து பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் எர்னஸ்ட், “ இப்போது செய்ததைத்தான், டொனால்ட் தனது பிரச்சாரம் முழுவதும் செய்து வருகிறார். இதன் மூலமாக, மக்களின் பயத்தோடு விளையாடி, தனது பிரச்சாரத்திற்கு வலுசேர்த்து வருகிறார். மிகவும் கீழ்த்தரமான வழியில் அமெரிக்காவை பிரிக்க நினைக்கிறார். இது அமெரிக்காவின் இறையாண்மைக்கே எதிரானதாகும்.” என்று தெரிவித்ததுள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு தங்கள் பகுதியில் நுழைய தடை விதிப்பதாக புளோரிடா மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர்களின் மேயர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply