shadow

டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி. அதிபராக பதவியேற்பது எப்போது?

1உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ஆம் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.

அடுத்த அதிபர் பதவிக்கு தேர்வு செய்ய 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் சற்று முன் வந்த தகவ்லின்படி அவருக்கு 276 வாக்குகள் கிடடத்துள்ளது. இதனால் டொனால்ட் அடுத்த அதிபர் பதவிக்கு தேர்வு பெற்றுவிட்டார். ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 218 வாக்குகள் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி வெற்றி வாகை சூடிய டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து டொனால்ட் வரும் ஜனவரியில் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply