shadow

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடையா? டிரம்பின் மாறாத மனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லீம்கள் மீது கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த டொனால்ட் டிரம்ப், தற்போது அதிபராக பதவியேற்கவுள்ள நிலையிலும் தன்னுடைய கருத்தை மாற்றி கொள்ளாமல் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பதவி ஏற்றதும் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பது உள்ளிட்ட தனது திட்டங்களில் ட்ரம்ப் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டன.

இதை உறுதி செய்வதுபோல் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் முஸ்லிம்கள் தொடர்பான உங்களின் திட்டங்களை மறுஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ‘என் திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவிலும், துருக்கியிலும் இப்போது நடந்திருப்பதைப் பார்க்கும்போது, என் யோசனை 100 சதவீதம் சரி என்பது நிரூபணமாகிறது’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘ஐரோப்பா, துருக்கியில் நிகழ்ந்திருப்பது பயங்கரமான சம்பவம். மிக மிக பயங்கரமானது. நம்முடைய உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும், மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலை சகிக்க முடியவில்லை’ என்று கூறினார்.

Leave a Reply