shadow

வாய்ப்பு கிடைத்திருந்தால் டயானாவுடன் உறவு கொண்டிருப்பேன். அமெரிக்க அதிபர் வேட்பாளரின் சர்ச்சை
donald
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முஸ்லீம்கள் குறித்தும் ,இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறித்து கொள்வது குறித்தும் சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த டொனால்ட் டிரம்ப் கடந்த 1990ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில், “இங்கிலாந்து  இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடையவர். அவரை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸிடம் இருந்து விவாகரத்து பெற்ற டயானாவை டொனால்ட் நெருங்க முயற்சித்ததாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டயானாவை மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியையும் அவர் அடைய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது அவருடைய பழைய பேச்சுக்கள் அனைத்தும் எதிர்க்கட்சியினரால் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply