shadow

இந்தியா தட்டி சென்ற வேலைவாய்ப்புகளை மீட்டு கொண்டு வருவேன். டொனால்ட் டிரம்ப்

donaldதற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுடன் நட்பாக இருந்து வரும் நிலையில் வரும் தேர்தலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை இந்தியா தட்டி பறித்து வருவதாகவும், தான் அதிபரானால் அந்த வேலை வாய்ப்புகளை திரும்ப அமெரிக்காவுக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் வாஷிங்டன் நகரில் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியத்நாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எடுத்துச் சென்றுவிட்டது. அதை நான் அந்த நாடுகளிலிருந்தே திரும்பக் கொண்டு வரப் போகிறேன். குறிப்பாக அதிகளவிலான இந்தியர்கள் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை தட்டிப்பறித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கருத்து தெரிவித்திருந்த டிரம்ப் தற்போது இந்தியாவுக்கு எதிராக விமர்சனம் செய்திருப்பது பெரும்  சர்ச்சையை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply