shadow

ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் டோனால்ட் டிரம்ப்
donald
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டோனால்ட் டிரெம்ப் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தன்னுடைய பிரச்சாரத்தில் ‘ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள் என்று அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் வெளிவரும் போன்களில் உள்ள தகவல்களை அமெரிக்க அரசு பார்ப்பதற்கு உதவுமாறு அளிக்குமாறு கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இந்த பிரச்சனையை நீதிமன்றம் மூலம் சட்டரீதியாக அணுகவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு டோனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, “ஆப்பிள் நிறுவனம், தீவிரவாதியின் போனில் உள்ள தகவல்களை தரும் வரையில் அந்த நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள்” என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் ஆப்பிள் தயாரிப்புகளை புறக்கணியுங்கள் என்று அவர் பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் பேசிய தகவல்கள் ஆப்பிள் ஐபோன் மூலம் அவரது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply