shadow

அமெரிக்கா: கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கிளி.

parrotஒரு கொலை வழக்கில் மனிதர்களின் சாட்சியே சில சமயம் செல்லத்தக்கவையாக கருதப்படும் நிலையில் அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் கிளி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சாட்சி எடுபடுமா? என்பதை இந்த வழக்கின் தீர்ப்பில்தான் தெரியவரும்.

அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்த மார்டின் என்பவருக்கும் அவரது மனைவி கிளன்னா துராம் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கிளன்னா துராம் தனது கணவர் மார்டினை 5 தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டார். பின்னர் தான் அவசரத்தில் செய்த தவறை எண்ணி வருந்தி அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் கணவரை சுடும்போது சுட்ட துப்பாக்கி அவர் தற்கொலை செய்ய முயற்சிக்கும்போது வெடிக்கவில்லை. இதனால் அவர் உயிர் தப்பினார்.

இந்நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. இதனிடையே இந்த தம்பதி ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளி ஒன்றை செல்லமாக வளர்த்தனர். அதற்கு ‘பட்’ என பெயிரிட்டுள்ளனர். இந்த கிளி மிகவும் தெளிவாக பேசும் திறன் படைத்தது. மேலும் நடந்த, நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து அதை திரும்ப தெரிவித்து வரும் சக்தி இதற்கு இருந்தது.

தற்போது இந்த கொலை வழக்கு மிசிகன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் இந்த கிளியை சாட்சி ஆக சேர்க்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் ராபர்ட் ஸ்பிரிங்ஸ் டெட் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிளி சாட்சி சொல்ல அனுமதித்துள்ளார். அறிவு திறன் படைத்த இக்கிளி தற்போது மார்டினின் முன்னாள் மனைவி கிறிஸ்டினா கெல்லரிடம் உள்ளது.

கொலை நடந்த அன்று இறுதியாக கிளன்னா துராமிடம் மார்டின் என்னை சுடாதே (‘டோன்ட் ஷூட்’) என கூறிய வார்த்தையை கிளி திரும்ப திரும்ப தெரிவிக்கிறது. எனவே கோர்ட்டில் இக்கிளி அளிக்கும் சாட்சியத்தின் மூலம் கிளன்னாவுக்கு தண்டனை வழங்க முடியும் என்று அரசு தரப்பு நம்புகின்றது. இருப்பினும் இது நிறைவேறுமா? என்பதை தீர்ப்பு வரை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply