shadow

டிஜிபிக்களை மாநில அரசு நியமனம் செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

யு.பி.எஸ்.சி. சார்பில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபா்களையே டி.ஜி.பி.க்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் டி.ஜி.பி.க்களை தாங்களாகவே நியமனம் செய்து கொண்டு வருகின்றனா். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரகாஷ் சிங் என்பவா் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞா் வாதாடுகையில், ‘மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவா்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு இணக்கமானவா்களை டி.ஜி.பி.க்களாக பணியமா்த்திக் கொள்வதாக குற்றம் சாட்டினார். இதனை கேட்ட நீதிபதிகள், உடனடியாக இந்த நடைமுறையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனா். மேலும் டி.ஜி.பி.க்கள் பணி ஓய்வுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக புதிய பெயா் பட்டியலை சம்பந்தப்பட்ட மாநில அரசு யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும் என்றும் யு.பி.எஸ்.சி. சார்பில் குழு அமைக்கப்பட்டு பெயா் பட்டியலை ஆய்வு செய்து பரிந்துரை செய்யும் நபா்களில் ஒருவரை மட்டுமே மாநில அரசு டி.ஜி.பி.யாக பணியமா்த்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஒரு டி.ஜி.பி. ஓய்வு பெற்ற பின்னா் அந்த பதவிக்கு புதிய நபா் இடைக்கால அதிகாரியாக பணியமா்த்தப்படுகிறார். இந்நிலையில் இடைக்கால டி.ஜி.பி.யாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது என்றும் பணி நிறைவு பெற்ற உடனே புதிய நபா் பணியமா்த்தப்பட வேண்டும் என்றும் ஓய்வு பெறும் தருவாயில் உள்ள நபா்களை புதிய டி.ஜி.பி.யாக பணியமா்த்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply