shadow

kani and mksதிமுகவில் தற்போது மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்தி புதிய தலைவர்களை தேர்ந்தெடுத்து வரும் நிலையில், திமுக மகளிர் அணிக்கு கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா எம்.பியுமான கனிமொழி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து குஷ்பு விலகிய பின்னர் மக்களை கவரும் வகையில் திமுகவில் பெண் தலைவர்கள் யாரும் இல்லாததால் கனிமொழிக்கு இந்த பதவியை கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கனிமொழிக்கு மகளிர் அணி தலைவர் பதவியை கொடுக்க மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவருக்கு மாணவர் அணி செயலாளர் பதவியை கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஜெயலலிதா, பிரேமலதா, தமிழிசை செளந்தர்ராஜன் போல திமுகவின் பெண் தலைவர் கனிமொழி என்று சொல்லும் அளவுக்கு கனிமொழியை வளர்க்க வேண்டும் என திமுக தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது விருப்பம் நிறைவேற ஸ்டாலின் முன்வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply