தேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு வரும் திமுக, அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின்னரும் தேர்தலை நடத்த விடாமல் சுப்ரீம் கோர்ட்டில் மனு மேல் மனு தாக்கல் செய்து தடங்கலை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று மாலை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று சற்று முன்னர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டவில்லை என்றும் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து இந்த முறையும் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் திங்களன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கும் அதே நாளில் சுப்ரீம் கோர்ட்டில் திமுக இந்த தேர்தலை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply