shadow

ரூ.16ஆயிரம் கோடிக்கு மது சப்ளை செய்த திமுக பிரமுகர்களின் மது ஆலைகள். ஒரு அதிர்ச்சி தகவல்

wineமீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக சமீபத்தில் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2014-2015 நிதியாண்டில் டாஸ்மாக் கொள்முதல் செய்த மொத்த மது கொள்முதலில் சுமார் 50% வரை திமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்துதான் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது கொள்முதல் செய்துள்ளது. இதில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மது திமுகவின் முக்கிய பிரமுகர்கள் நடத்தும் மது ஆலைகளில் இருந்து மது சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளிவிபரம் அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 16ஆயிரம் கோடி ரூபாய் மதுவை சப்ளை செய்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு மதுவிலக்கு வேண்டும் என்று போராடுகின்றனர் என பொதுமக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 5.54 கோடி மதுவகைகள் பெட்டிகளும், பீர் வகைகள் 2.51 கோடி பெட்டிகளும் கொள்முதல் செய்துள்ளது.  இவற்றின் மொத்த மதிப்பு 34 ஆயிரத்து 120 கோடி ரூபாய். இதில், தி.மு.க. ஆதரவாளர்களுக்கு சொந்தமான மது ஆலைகளின் பங்கு 15 ஆயிரத்து 822 கோடி ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது.

Leave a Reply