shadow

kushboo and congressதிமுகவில் இருந்து விலகிய பின்னர் சில மாதங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை குஷ்பு நேற்று முன் தினம் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதுகுறித்து நடிகை குஷ்பு நேற்று பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திமுகவில் இருந்து நான் வெளியேறி விட்டாலும் ஸ்டாலின் உள்பட யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து விலகியது குறித்து நடிகை குஷ்புவிடம் கேட்டபோது,  ஜி.கே.வாசன் மீது எனக்கு நிறைய மதிப்பு, மரியாதை உண்டு. அரசியலில் நிறைய அனுபவம் கொண்ட அவர், ஏன் காங்கிரஸைவிட்டு வெளியேறினார் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி விசாரிக்கவும் விருப்பமில்லை. அவரைப்பற்றி பேசக்கூடிய தகுதி எனக்கு அறவே இல்லை என்று கூறினர்.

இதே போல் ரஜினி குறித்து கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, ரஜினி பாஜகவில் சேருவதும் சேராதிருப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம், இதுபற்றி பேச எனக்கும் உங்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது என்று கூறினார்.

Leave a Reply