தேமுதிகவால் என்ன பயன் தெரியுமா? பழ.கருப்பையா கூறும் புதிய தகவல்
Pazha. Karuppaiah1
விஜயகாந்தின் தேமுதிக உள்பட சில கட்சிகளால் திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து இன்னொன்றை ஆட்சிக்கு வரவழைக்க உதவ முடியுமே தவிர இவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது. கருணாநிதியை தோற்கடித்து ஜெயலலிதாவை வெற்றி பெற செய்வதாலோ அல்லது ஜெயலலிதாவை தோற்கடித்து கருணாநிதியை வெற்றி பெற செய்வதாலோ இவர்களுக்கு என்ன பயன் இருக்கின்றது? என்று சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். மேலும் இப்போதுள்ள கூட்டணியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக குறித்து அவர் கூறியபோது, “‘அதிரடி நடவடிக்கையாக பல அமைச்சர்கள் நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும் அ.தி.மு.க.வில் வாடிக்கையான ஒன்றுதான். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்துக் கொள்வார்கள். நான் ஒருவன்தான் ராஜினாமா கடிதம் கொடுத்தவன். கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டதற்கும், சேர்க்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்று சொல்லமாட்டார்கள்’ என்று கூறினார்.

மேலும் தேர்தல் கமிஷனின் கெடுபிடியையும் அவர் விட்டு வைக்கவில்லை. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை குறித்து அவர் கூறியதாவது: தற்போது தேர்தல் கமிஷன் நடவடிக்கை என்பது போகிற, வருகிறவர்களின் டவுசர் பையில் பணம் இருந்தால் கூட எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களால் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று கூறினார்.

பழ.கருப்பையா விரைவில் திமுக அல்லது காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *