30 தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்திருக்கும்: காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை!

திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இரு தரப்பு தலைவர்களுக்கு இடையிலான விவாதம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன் அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்கு சதவீதம் தமிழகத்தில் இல்லை என்றும் அதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஆத்திரமடைந்து 2016ம் ஆண்டு தேர்தலில் 30 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி இல்லாமல் இருந்தால் திமுக தோல்வி அடைந்திருக்கும் என்று ஆதாரத்தை வெளியிட்டு உள்ளனர்

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் கூட்டணி இல்லாமல் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் கடந்த மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகள் திமுக கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கட்சியின் முக்கிய காரணம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுக காங்கிரஸ் கட்சியின் பிரச்சனை உச்சகட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply