shadow

திமுக கூட்டணியில் தேமுதிக? 59 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டாரா கேப்டன்?

vijayakanth தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி, தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்லும் என்பதுதான். மத்திய அமைச்சர் ஜவடேகர் சென்னைக்கு நேரில் வந்திருந்தபோதும் கூட்டணி குறித்து விஜயகாந்த் எவ்வித பிடியும் கொடுக்காததே அவர் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து திமுக-தேமுதிக பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வெற்றி பெறும் இடங்களை பொறுத்து ஆட்சியில் பங்கு குறித்து ஆலோசிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டதாகவும் ஒருசில இணையதளங்களில் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவலை இரண்டு கட்சியினரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதுகுறித்து தேமுதிகவின் முக்கிய தலைவர் ஒருவர் கூறியபோது, ‘இந்தச் செய்தி முழுக்க முழுக்க வதந்தி. திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேராது.  தேமுதிக வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது.  அதில் விஜயகாந்த் பிஸியாக இருக்கிறார். கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன” என்றும் கூறினார்.

கேப்டன் வெகுவிரைவில் தன்னுடைய முடிவை அறிவிக்காவிட்டால் இதுபோன்ற வதந்திகள் எழுவதை தவிர்க்க முடியாது என்று தேமுதிக இரண்டாம் கட்ட தலைவர்களே புலம்பி வருகின்றனர்.

201504270049075728_Vijayakanth-meeting-with-Karunanidhi_SECVPF

Leave a Reply