shadow

தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் திடீர் விரிசல். விஜயகாந்த் விருந்தை புறக்கணித்த தலைவர்கள்
vijayakanth
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றபோது மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதன்காரணமாக இந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் நலக்கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் ஒன்றை இன்று காலை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்திடம் அளித்ததாகவும், அந்த பட்டியலை பார்த்த விஜயகாந்த், இதில் 65 தொகுதிகள் ஏற்கனவே தேமுதிக போட்டியிட தேர்வு செய்திருப்பதாகவும் இதில் இருந்து 10 முதல் 15 தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க முடியும் என்றும் விஜயகாந்த் திட்டவட்டமாக கூறியதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் ஏற்பாடு செய்திருந்த விருந்தை புறக்கணித்துவிட்டு கோபத்துடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.

வட மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளை தேமுதிக, மக்கள் நலக்கூட்டணிக்கு தர மறுப்பதால், விடுதலை சிறுத்தைகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply