வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கலந்து கொண்டார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி மகிழ்வர்.

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அவர்கள் வசிக்கும் நாட்டில் இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா உறவை மேம்படுத்தும் வகையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அமெரிக்க நாட்டின் முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா மகிழ்ச்சியுடன் இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் உற்சாகமாக நடனமாடினார்.

இதில் இந்தியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர். அப்போது அழகிய உடையை அணிந்து வந்து மிஷெல், ÔÔவெள்ளை மாளிகையில் இது முதல் முறை. இது ஒரு அற்புதமான நேரம். நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள மும்பையில் எனது கணவர் ஒபாமாவுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன். இந்த பண்டிகை மிக பழமை வாய்ந்ததாகும். இதில் நீங்கள் எல்லாம் கலந்து கொண்டதை பார்க்கும் பொழுது பாலிவுட்டே இங்கே வந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க் நகரம் இந்தியர் மற்றும் அமெரிக்கர்களை ஒருங்கிணைத்த நகரம் என்று கூட சொல்லலாம் என்றார்.

Leave a Reply