tirupatiதிருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் திவ்யதரிசனம் என்ற முறை இருந்து வருகிறது. இந்த திவ்யதரிசன முறையை சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு கிழமைகளில் ரத்து செய்ய தேவஸ்தானம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. திவ்ய தரிசன முறையை ரத்து செய்யும் நடவடிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும் என்று கோவில் கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராஜ் அவர்கள் தெரிவித்தார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பாதயாத்திரை பக்தர்களால் தர்ம தரிசன பக்தர்களை மணிக்கணக்கில் சில சமயங்களில் நாள் கணக்கில் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தர்ம தரிசன பக்தர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் திவ்ய தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்து உள்ளோம்’’ என்று கூறினார். இந்த திடீர் அறிவிப்பு பாதயாத்திரையாக வரும் பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 41,815 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 18 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்து நின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *