shadow

images

தொடர் மழை காரணமாக, பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்..: டிசம்பர் 9 முதல் நடத்தப்பட இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 12 முதல் 16 வரை நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ். விஜயன் அறிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில்..: இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்க இருந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவை டிசம்பர் 19 முதல் வார இறுதி நாள்களில் நடத்தப்படும் என்றும் திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை www.idenuom.ac.in இணையதளத்தில் 10-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் எனப் பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில்..: பல்கலைக்கழகம், அதன் வளாகத்தில் இயங்கி வரும் ஆற்றல்சார் சட்டப் பள்ளி, தொலைநிலைக் கல்வி நிறுவனம் மட்டுமின்றி இணைப்புக் கல்லூரிகளுக்கும் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்த அனைத்துத் தேர்வுகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply