திரைப்பட இயக்குனர் விசு காலமானார்

மணல்கயிறு, நாணயம் இல்லாத நாணயம், சம்சாரம் ஒரு மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம் உள்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் விசு சற்றுமுன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74

விசுவின் மரணத்தை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனராக மட்டுமின்றி ‘தில்லு முல்லு’, ‘நெற்றிக்கண்’ உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் விசு பணியாற்றியுள்ளார் என்பதும், ‘மன்னன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக உடல் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் விசு, சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கும் என தெரிகிறது

Leave a Reply