shadow

பாஜகவில் இணைந்தார் பிரபல இயக்குனர் விசு

visuபிரபல நடிகர், இயக்குனர், பேச்சாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான விசு இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். பாரத பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து நரேந்திரமோடி  நாட்டில் பல மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் அவர் மாற்றத்தை தருவார் என்ற நம்பிக்கையில் தான் பாஜகவில் இணைந்ததாகதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஏற்கனவே கங்கை அமரன், நெப்போலியன் உள்பட ஒருசில கோலிவுட் பிரபலங்கள் பாஜகவில் இணைந்து ஒருசில பொறுப்புகளையும் பெற்ற நிலையில் தற்போது இயக்குனர் விசுவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கு நிலையில் இன்னும் ஒருசில கோலிவுட் திரையுலகினர் பல்வேறு அரசியல் கட்சியில் சேருவார்கள் என்று கூறப்படுகிறது.visu

Chennai Today News: Director Visu joins in BJP

Leave a Reply