சத்தியமா கிராபிக்ஸ் இல்லை. அஜித் ஃபர்ஸ்ட்லுக் குறித்து சிறுத்தை சிவா

அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விஜய் ரசிகர்கள் உள்பட ஒருசிலர் இந்த பர்ஸ்ட்லுக் முழுக்க முழுக்க போட்டோஷாப் என்றும் கிராபிக்ஸ் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சிறுத்தை சிவா விளக்கம் அளித்து வீடியோ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சத்தியமாக இது கிராபிக்ஸ் இல்லை. இதற்கு மேல் நான் எந்த வார்த்தையை பயன்படுத்துவது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த காட்சியை நான் அஜித்திடம் கூறி அதற்கேற்ப உடற்கட்டை கொண்டு வரவேண்டும் என்று நான் சொன்னவுடன் அஜித் உடனே ஒப்புக்கொண்டார்.

தினமும் நான்கு மணி நேரம் ஜிம்முக்கு சென்று இந்த உடற்கட்டை கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி இந்த காட்சிகள் படமாக்கும்போது அதிக சிரத்தை எடுத்து நடித்தார். இந்த உண்மை படம் பார்க்கும்போது அனைவருக்கும் புரியும்’ என்று கூறியுள்ளார்.

சிவாவின் இந்த விளக்கத்தை தொடர்ந்தும் இன்னும் பலர் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிராபிக்ஸ் என்றே கூறி வருகின்றனர். படம் வெளிவந்தால்தான் இந்த கிண்டல் அடங்கும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *