shadow

பிரபுதேவா படத்தில் நடிக்கும் கமல் இயக்குனர்
prabhudeva
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘பம்மல் கே.சம்பந்தம்’ படம் உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மெளலி, கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் , பிரபுதேவா தயாரிக்கும் ஒரு படத்தில் மெளலி இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடம் ஒன்றில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபுதேவா தயாரித்து வரும் ‘வினோதன்’ என்ற படத்தை விக்டர் ஜெயராஜ் என்பவர் இயக்கி வருகிறார். வருண், வேதிகா, சலோனி உத்ரா, ஜெகன், ரோஹினி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் மெளலி இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகனுக்கு ஏற்பட்ட மனநிலை மாற்றத்தை சரிசெய்யும் ஒரு முக்கிய பாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒருசில காட்சிகளில் வேதிகா 60 வயது பெண்ணாகவும் நடித்துள்ளாராம். இந்த படத்தின் 20 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply