shadow

35 வயது நடிகையுடன் 60 வயது இயக்குனர் திருமணம்

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் தான் இயக்கிய ‘இது காதல் கதை’ என்ற படத்தின் நாயகி ஷெர்லியை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் வேலு பிரபாகரன், கடந்த 2009ஆம் ஆண்டு இயக்கிய ‘இது காதல் கதை ‘ என்ற படத்தில் நடித்த நடிகை ஷெர்லியை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தோழியாக இருந்த ஷெர்லியை இன்று முதல் மனைவியாக ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் இந்த திருமணம் பதிவுத்திருமணமாக செய்யப்படும் என்றும் கூறினார்

இயக்குனர் வேலுபிரபாகரன் பெரியாரின் கொள்கையை பின்பற்றுவர் என்பதால் பெரியாரை போலவே திருமணம் செய்து கொண்டார் என்று டுவிட்டரில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply