shadow

download

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 27 டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

1. Scientific Assistant:

2 இடங்கள் (பொது – 1, எஸ்சி – 1).

தகுதி:

60% தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் பி.எஸ்சி. பட்டம்.

2. Library Assistant ‘A’:

2 இடங்கள் (பொது – 1, எஸ்டி – 1).

தகுதி:

60% தேர்ச்சியுடன் நூலக அறிவியல்/ நூலகம் மற்றும் தகவல் அறிவியல் அல்லது அதற்கு சமமான படிப்பு. நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் கம்ப்யூட்டர் அறிவுடன் கூடிய அறிவியல் பட்டதாரிகள் விரும்பத்தக்கது.

3. Technical Assistant (Electrical):

4 இடங்கள். (பொது – 2, ஒபிசி – 2).

தகுதி:

60% தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.

4. Technical Assistant (Mechatronics):

1 இடம் (பொது).

தகுதி:

60% தேர்ச்சியுடன் மெக்கட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.

மேற்கண்ட 4 பணிகளுக்கும் சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

5. Technician ‘B’: (Electrician):

16 இடங்கள் (பொது – 9, ஒபிசி – 4, எஸ்சி – 1, எஸ்டி – 2).

தகுதி:

எலக்ட்ரிக்கல் டிரேடில் என்சிவிடி அல்லது ஐடிஐயுடன் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி.

6. Technician ‘B’: (Machinist):

1 இடம். (எஸ்டி)

தகுதி:

எஸ்எஸ்எல்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ அல்லது என்சிவிடி சான்றிதழ்.

7. Technician ‘B’:

1 இடம் (எஸ்டி)

தகுதி:

எஸ்எஸ்எல்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ அல்லது என்சிவிடி சான்றிதழ்.

மேற்கண்ட 3 பணிகளுக்கும் சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

வயது:

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 2.11.15 அன்று 35க்குள். எஸ்சி., எஸ்டியினர் 40க்குள்ளும், ஒபிசியினர் 38க்குள்ளும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்றாற் போல் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் //www.sac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.11.2015.

Leave a Reply