மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக்

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்காளதேச அணிக்கு எதிராக கடைசியாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடினார். அதன்பின்னர் 8 ஆண்டுகள் கழித்து தற்போது தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

தினேஷ் கார்த்திக் இதுவரை ஆடிய 23 டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். அதில் அவர் ஒரு சதம் மற்றும் 7 அரைச்சதம் எடுத்துள்ளார். 51 கேட்ச் மற்றும் 5 ஸ்டெம்பிட் எடுத்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *