shadow

திமுக போராட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். திவாகரன் கருத்து

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என தினகரனின் திவாகரன் கூறியுள்ளார். இருப்பினும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், ‘நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் தினகரன் ஆதரவு சட்டம‌ன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து ஆகும்.

இந்த போராட்டத்திற்கு எங்களை அழைக்காவிட்டாலும் இந்த போராட்டம் உன்னதமானது என்பதால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் அ.தி.மு.கவினரின் விருப்பம் என்று திவாகரன் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply