மீண்டும் கூவத்தூர் பாணி: புதுவைக்கு சென்ற தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கூறிய நிலையில் இந்த 19 எம்.எல்.ஏக்களும் தற்போது திடீரென புதுவைக்கு கிளம்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கவர்னர் தற்போது மும்பைக்கு திரும்பிவிட்டாலும் எந்த நேரத்திலும் அவர் முதல்வரை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ள 19 பேர்களில் யாரும் அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக அனைவரும் புதுவையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னர் 135 எம்.எல்.ஏக்களும் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *