shadow

அதிமுக டெபாசிட் பெற திமுகவே காரணம்: தினகரன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ள டிடிவி தினகரன், ஸ்டாலின் தலைமையிலான திமுக தேர்தல் களத்தில் சரியாக செயல்பட்டிருந்தால் அதிமுக டெபாசிட் இழந்து மூன்றாவது இடத்தை அடைந்திருக்கும் என்று கூறியுள்ளார்

40 ஆண்டுகள் அனுபவமுள்ள ஸ்டாலின் அதீத நம்பிக்கையால் ஆர்.கே. நகர் தொகுதியில் கோட்டை விட்டுவிட்டதாக கூறிய தினகரன், ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியை தமிழகம் முழுவதும் பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

ஏற்கனவே, இருந்த வாக்கு வங்கி, கூட்டணியெல்லாம் பார்த்து கணக்கு பார்த்துக்கொண்டு திமுகவினர் கவனக்குறைவாக இருந்துவிட்டதாகவும், அதிமுக கோல்மால்களை செய்து டெபாசிட் வாங்கிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திமுக சோம்பேறித்தனத்தை தவிர்த்து செயல்பட்டிருந்தால், அதிமுக டெபாசிட் வாங்கியிருக்காது என்றும் தான் திமுகதான் 2வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்த்ததாகவும், அதிமுக டெபாசிட் வாங்கியது தனக்கு வருத்தம்தான் என்றும் தினகரன் மேலும் தெரிவித்தார்