பெங்களூர் விரைந்தார் தினகரன்? ஆர்.கே.நகரில் போட்டியில்லையா?

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட அவரது குடும்பத்திற்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் இதுகுறித்து ஆலோசனை செய்ய டிடிவி தினகரன் இன்று பெங்களூர் விரைகிறார்.

ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டால் நிச்சயம அவர் சிறை செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவரது குடும்பத்தினர் சிலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இரட்டை இலையும் கையைவிட்டு சென்றுவிட்ட நிலையில் தினகரன் ஆதரவாளர்களும் அதிமுகவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க தினகரன் சென்றுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக, தினகரன் பெங்களூரு விரைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த தினகரன் முடிவுசெய்துள்ளதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *