shadow

dilwaleசென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களை அடுத்து ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ‘தில்வாலே. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். ரோஹித் ஷெட்டியும், ஷாருக்கானும் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஷாருக்கான், காஜோல், வருண் தவான், பொம்மன் இரானி, கபீர் பேடி உள்பட பலர் நடித்துள்ள ‘தில்வாலே’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா உள்பட பல வெளிநாடுகளில் நட்நது வருகிறது. சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 18-ந் தேதி வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான்-காஜல் ஜோடியாக நடித்த பல படங்கள் இந்தி ரசிகர்களை மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் பெரிதும் கவரும். தற்போது இந்த ஜோடி மீண்டும் களமிறங்குவதால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply