திலீப்-காவ்யா மாதவன் திடீர் திருமணம். கேரள திரையுலகில் பரபரப்பு

dilipபிரபல மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை இன்று காலை கொச்சியில் திருமணம் செய்து கொண்டார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த திருமணம் திடீரென நடந்துள்ளதால் கேரள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே திலிப், காவியா காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தாலும் இருவருமே இந்த தகவலை மறுத்தனர். ஆனால் இன்று காலை 9 மணிக்கு திடீரென கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், நடிகைகள் மீரா ஜாஸ்மின், நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா, சிப்பி, ஜமோல் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திலீப் நடிகை மஞ்சு வாரியாரை திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்டவர் என்பதும் காவ்யா மாதவன் தொழிலதிபர் நிஸ்சல் சந்திராவை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *