shadow

download

பெங்களூருவில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி).,யில்  எம்.எஸ்சி., டிஜிட்டல் சொசைட்டி படிப்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வருட கால அளவு கொண்ட இப்படிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது.

இப்படிப்பில் ஆர்முள்ளவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் பயன்படுத்தலாம். கல்வி தகுதியாக இளங்கலையில் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தீர்வுகளை நிலையான டிஜிட்டல் சொசைட்டி மூலம் செயல்படுத்த மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் என்று சஸ்டைனபிள் சொசைட்டி இயக்குநர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.

Leave a Reply