shadow

டிஐஜி ரூபா பணியிட மாற்றத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

சசிகலாவுக்கு பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடி கைமாறி இருப்பதாகவும் செய்திகள் கசிந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா, நேற்று திடீரென பணியிட மாற்றாம் செய்யப்பட்டார். இதனை கர்நாடக எதிர்க்கட்சிகளும், தமிழக, எதிர்க்கட்சிகளும், புதுவை கவர்னர் கிரண்பேடியும் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாரதிய ஜனதா எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *