shadow

சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்துவது கடினம். சித்தராமையா

siddharamaiahகாவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நேற்று அளித்த உத்தரவு ஒன்றில் இன்று முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை அமல்படுத்துவது கடினம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது; ”கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற பொதுமக்களும், விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். காவிரிபடுகையில் உள்ள விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையில் அவர்கள் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நேற்று செப்.21 முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. அதையே வழங்க முடியாது என்ற நிலை உள்ள போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவது மிகவும் கடினம்.

எனது தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்த சாதக, பாதகங்களை ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கப்படும். மேலும், பா.ஜ.க., ம.ஜ.த. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மக்களவை உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கப்படும்”

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்,.

Leave a Reply