shadow

dieselஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வந்த நிலையில், ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் அளவுக்கு விலையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, சர்வதேச விலை நிலவரங்களுக்கு இணையாக, டீசலில் சில்லரை கடந்த 2013 ஜனவரி முதல், ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இதுவரை மொத்தம் 19 முறை விலை உயர்த்தப்பட்டதில் ரூ.11.80 அளவு விலைஉயர்ந்தது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது பேரல் ஒன்றுக்கு 100 டாலருக்கும் குறைவாக சரிந்துள்ள நிலையில், கடந்த 14 மாதங்களில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $99.59 என்ற விலையில் தற்போது உள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், எனவே டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் ஈட்ட தொடங்கும் என்றும், இதன் காரணமாக விலை குறைப்பு அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் எண்ணெய் நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு கிடைக்கும் இலாபத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க விரும்புகிறோம். டீசல் விலையை ஒழுங்குபடுத்துவது மத்திய அரசுதான் என்பதால், விலை குறைப்பு தொடர்பாக வருகிற 15 ஆம் தேதிவாக்கில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக இனி மாதந்தோறும், 50 காசுகள் விலை உயர்த்துவது அமலில் இருக்காது

Leave a Reply