shadow

ரூ.700 கோடி லஞ்சம் வாங்கினாரா விஜயகாந்த்? சந்திரகுமாரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

chandrakumarஅதிமுக அணியின் ‘பி’ டீம் என்று மக்கள் நலக்கூட்டணியை நடுநிலை அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் அந்த கூட்டணியில் தேமுதிக இணைய ரூ.700 கோடி வாங்கியி8ருப்பதாக மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகார் ஒன்றை கிளப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேமுதிகவிடம் இருந்து பிரிந்த மக்கள் தேமுதிக, திமுகவுடன் இணைவது குறித்து ஆலோசனன கூட்டம் ஒன்றை சென்னையில் நேற்று நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், “எங்களை விஜயகாந்த் கடனாளியாக்கி விட்டு, தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடு தெருவுக்கு வந்து விட்டார்கள்.
தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை. இதை இந்த தேர்தல் நிரூபித்து இருக்கிறது. 10 சதவீதம் இருந்த வாக்கு வங்கியை விஜயகாந்த் வெறும் 2.4 சதவீதமாக ஆக்கிவிட்டார். அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் கூட அவரால் வாங்க முடியவில்லை. மக்கள் விஜயகாந்தை நிராகரித்து விட்டனர். அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது.

தன்னுடைய வீட்டில் உள்ளவர்களையே விஜயகாந்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றைக்கு 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார். எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு அவர் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார். நாங்கள் எங்கள் அமைப்பின் தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் காட்டி, திமுகவில் சேர விருப்பத்தை தெரிவிப்போம். அதன்பிறகு ஒரு மாநாட்டை நடத்தி, திமுகவில் இணைவோம்” இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

Leave a Reply